

புதுடெல்லி:
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள்.
இதில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறான்.
குண்டு வெடிப்பில் தொடர்புடைய அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது துபாயில் பதுங்கி இருந்த தாவூத்இப்ராகிமின் மேலும் ஒரு கூட்டாளியான பரூக்தக்லா கைது செய்யப்பட்டான். இவன் 1993-ல் இருந்து தலைமறைவாக இருந்தான்.
இன்று காலை அவன் ரகசியமாக டெல்லி விமான நிலையம் வந்து இறங்கினான். அவனை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்த போது தேடப்படும் குற்றவாளி பரூக்தக்லா என தெரிய வந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சி.பி.ஐ. அதிகாரிகள் விரைந்து சென்று கைது செய்தனர்.
1995-ம் ஆண்டு இவன் சர்வதேச போலீஸ் உதவியுடன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். 25 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்டுள்ளான். விசாரணைக்கு பின் அவனை மும்பை கொண்டு வந்து மும்பை தடா கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். #tamilnews