நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் முதலமைசருக்கு ஆதரவாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் முதலமைசருக்கு ஆதரவாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் முதலமைசருக்கு ஆதரவாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி
Published on

நெல்லை:

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விஜயநாராயணம் பாசன கால்வாய் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கி, பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். மீண்டும் அவர் முதல்-அமைச்சராக வந்தால் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்களை அமல்படுத்துவார். அதனால் தான் நாங்கள், முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்“ என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயநாராயணம் பாசன குளத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com