100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கடையம் ஒன்றியம் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் 100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
மனு
மனு
Published on

கடையம்:

கடையம் ஒன்றியம் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் 100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. கருத்தப்பிள்ளையூரில் 100 நாள் வேலை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். 4 வாரத்துக்கு ஒருமுறை வேலை கொடுக்கும் நிலையை கைவிட்டு தினமும் வேலை கொடுக்க வேண்டும்.

அரசு நிர்ணயித்த முழுசம்பளம் ரூ.256 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பஞ்சாயத்து செயலாளரிடம் கொடுக்கப்பட்டது. இதில் விவசாய சங்க ஒன்றிய துணைத்தலைவர் கிறிஸ்டோபர் தலைமையில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேஷ், மாவட்ட துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com