திருவள்ளூர் அருகே விவசாய கிணற்று நீரை லாரியில் திருடி விற்பனை

திருவள்ளூர் அருகே விவசாய கிணற்று நீரை திருடி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாடு
குடிநீர் தட்டுப்பாடு
Published on

சென்னை:

திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து லாரிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

அவ்வாறு எடுக்கப்படும் தண்ணீர், சென்னையில் உள்ள பெரு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடம்பத்தூர் ஒன்றியம் வயலூர் கிராமத்தில் சிலர் தங்களுக்கு சொந்தமான விளை நிலத்துக்கு பயன்படுத்த வேண்டிய கிணற்று தண்ணீரை லாரிகள் மூலமாக ஓட்டல்களுக்கும், குடிநீர் தொழிற் சாலைகளுக்கும், தனியார் நிறுவனத்துக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை தடுக்க சட்ட விரோதமாக தண்ணீரைத் திருடி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com