மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விவசாயி தற்கொலை

கிருஷ்ணகிரியில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விவசாயி தற்கொலை
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, ஜெங்கலேரி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன் (வயது 65). இவருக்கு அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதில் அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதியும், வழக்கம் போல் அதிக அளவில் மது குடித்துவிட்டு வந்த ராமச்சந்திரன் தனது 2-வது மனைவியான மாதம்மாள் (35) என்பவரிடம் தகராறு செய்துள்ளார். அதில் மாதம்மாள் தனது கணவர் ராமச்சந்திரனை இனி மது குடிக்ககூடாது என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன், வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.

இதனைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராமச்சந்திரின் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து ராமச்சந்திரன் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com