சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி.
குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி.
Published on

சேலம்:

சேலம் மல்லூர் அருகே வேடிக்காரன்புதூரை சேர்ந்த விவசாயி பழனிசாமி. இவரது மனைவி தமிழ் செவ்வி, மகன் பொன் சங்கர், மகள் சவுந்தர்யா. இவர்கள் 4 பேரும் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

அப்போது கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு திடீரென குடும்பத்துடன் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஓடி சென்று அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

எனக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது. இதை சிலர் அபகரித்துக் கொண்டனர். இது குறித்து மல்லூர் போலீசில் புகார் தெரிவித்தேன். அவர்கள் விசாரணை நடத்தி நிலலத்தை திருப்பி வழங்குமாறு அவர்களிடம் கூறினர்.

ஆனால் அவர்கள் நிலத்தை திருப்பி வழங்காமல் இழுத்தடித்து வந்தனர். நிலத்தை தரும்படி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இது குறித்து சட்டபடி நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டு தர வேண்டும்.

மேலும் எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர்கள் 4 பேரையும் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com