நிலக்கோட்டையில் விவசாயி அடித்து கொலை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விவசாயி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையை சேர்ந்தவர் ராமன் (வயது 65). விவசாயி. இதே ஊரை சேர்ந்த செல்வம் மகன்கள் மூர்த்தி, தங்கராஜ், பொன்னுச்சாமி ஆகியோரின் தோட்டமும், ராமனின் தோட்டமும் அருகருகே உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமன் தனக்கு சொந்தமான இடத்தில் ஊன்றப்பட்டு இருந்த கல்லை பிடுங்கி எறிந்தார். இதனால் ராமனுக்கும் மூர்த்தி தரப்பினருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு ராமன் நிலக்கோட்டை சென்று விட்டு வீட்டுக்கு சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது தங்கராஜ் உருட்டுக்கட்டையால் ராமனை தாக்கி விட்டு தப்பி ஓடினார். படுகாயமடைந்த ராமனை நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். தப்பி ஓடிய தங்கராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com