திருக்காட்டுபள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது

திருக்காட்டுபள்ளி அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள அம்மன்குடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விவசாயி அறிவழகன் (வயது 47) என்பரை அவரது அண்ணன் மகன் முத்துமாணிக்கம் வெட்டி கொலை செய்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அறிவழகனின் மகன் பிரகாஷ் (20) திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார்.

புகாரில் தனது தந்தையை அதே ஊர் அதே தெருவைச் சேர்ந்த தனது உறவினர்கள் முத்துமாணிக்கம் அவரது மனைவி கலைச்செல்வி, தினேஷ் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

முத்துமாணிக்கத்தின் மனைவி கலைச்செல்வியும் தினேசும் தகாத உறவு வைத்திருந்ததாகவும் இதை தனது தந்தை அறிவழகன் கண்டித்தார். இதனால் ஏறப்ட்ட ஆத்திரத்தில்அரிவாளால் வெட்டி கொலை செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கொலையுண்ட அறிவழகனின் மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி, சப்-இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து தலைமறைவாகி இருந்து முத்துமாணிக்கம்(37) இவரது மனைவி கலைச்செல்வி(32) மற்றும் பக்கத்துவீட்டில் வசித்து வந்த தினே‌ஷ் (34) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

கைது செய்த மூவரிடமும் விசாரணைக்கு பின்னர் திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com