பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் ரூ.1 லட்சம் நகை கொள்ளை

பண்ருட்டி அருகே விவசாயி வீட்டின் பின் பக்க கதவை உடைத்து பீரோல் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் ரூ.1 லட்சம் நகை கொள்ளை
Published on

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர்மணி (62). விவசாயி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீடு கிரக பிரவே‌ஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த 22-ந்ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டு பின் பக்க கதவு உடைக்கப்பட்டு பிரோவில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி மணி பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ், குற்றப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் லூயில்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பண்ருட்டி துணை சூப்பிரண்டு சுந்தரவடிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் மற்றும் கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் ஆகியோர் வரவழைக்கப்ட்டனர்.

மோப்ப நாய் அர்ஜூன் மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com