வேப்பனப்பள்ளி அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த வாலிபர் கைது

வேப்பனப்பள்ளி அருகே விவசாயி வீட்டில் புகுந்து கத்திமுனையில் மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடித்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பனப்பள்ளி அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த வாலிபர் கைது
Published on

வேப்பனப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வத் நாராயணன். விவசாயி. இவரது வீட்டில் கடந்த 9-ந்தேதி மர்ம நபர்கள் 4 பேர் புகுந்து கத்திமுனையில் மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அஸ்வத் நாராயணன் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராபவதி, சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தங்கவேல் (வயது 22) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தங்கவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம், 8 பவுன் நகை மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தங்கவேலின் நண்பர்கள் 3 பேரை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com