சிங்காரபேட்டை அருகே விஷம் குடித்த விவசாயி மரணம்

சிங்காரபேட்டை அருகே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மரணம்
மரணம்
Published on

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டையை அடுத்துள்ள ஆண்டியூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது55). விவசாயியான இவர் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட தனபால் நேற்று முன்தினம் வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக தனபால் உயிரிழந்தார்.

இது குறித்து சிங்காரபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com