பாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் விவசாயி தற்கொலை

பாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் விவசாயி தற்கொலை
Published on

பாகூர்:

பாகூர் அருகே மணமேடு காலனியை சேர்ந்தவர் மலையான் (வயது46), விவசாயி. இவருக்கு கவுரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று மலையான் விவசாயத்தை சரிவர கவனிக்காமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். நேற்றும் இதுபோல நிலத்துக்கு சென்று விவசாய வேலை செய்யாமல் மலையான் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

இதனை அவரது மனைவி கவுரி கண்டித்தார். இதனால் மனமுடைந்த மலையான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் குளியலறையில் தனது வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கரையாம்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com