திருவாரூர் அருகே கோவில் பூசாரியை தாக்கிய விவசாயி கைது

திருவாரூர் அருகே கோவில் பூசாரியை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் அருகே கோவில் பூசாரியை தாக்கிய விவசாயி கைது
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் காவல் சரகம் கரையான் பாலையூரை சேர்ந்தவர் செந்தில். விவசாயி. இப்பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூசாரியாக கீழப்பாலையூரை சேர்ந்த மகேந்திரன்(35) என்பவர் உள்ளார். கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கரில் மகேந்திரன் சாகுபடி செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று மகேந்தரனிடம், பணம் கட்டிதான் கோவில் நிலத்தில் சாகுபடி செய்கிறாயா? என்று செந்தில் கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த செந்தில் பூசாரி மகேந்திரனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் குடவாசல் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com