குடும்ப தகராறு- தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

திசையன்விளை அருகே குடி பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள ரோச் மாநகரை சேர்ந்தவர் சூசை இருதய ஜெகன் (வயது40). தொழிலாளியான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி மரிய அந்தோணி பிரபா அவரிடம் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பிறகும் இப்படி பொறுப்பு இல்லாமல் குடித்து விட்டு வருகிறீர்களே என்று கேட்டுள்ளார்.

இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சூசை இருதய ஜெகன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது பற்றி அவரது மனைவி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com