திருக்காட்டுப்பள்ளி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தம்பியை குத்திகொன்ற அண்ணன்

குடும்ப பிரச்சினையில் தம்பியை அவருடைய அண்ணனே குத்தி கொலை செய்த சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருக்காட்டுப்பள்ளி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தம்பியை குத்திகொன்ற அண்ணன்
Published on

பூதலூர்:

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கண்டமங்கலம் பரமேஸ்வரன் காலனியை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது39). இவருடைய தம்பி ராஜேஷ்(31). இவர்கள் பரமேஸ்வரன் காலனியில் எதிர் எதிர் வீடுகளில் வசித்து வந்தனர். இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2 ஆண்டுகளாக வெளியூரில் வேலை பார்த்து வந்த ராஜேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மாலை சின்னப்பனும், ராஜேசும் தங்கள் வீடுகளில் இருந்தனர். அப்போது திடீரென இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த சின்னப்பன் தனது வீட்டில் இருந்து கூர்மையான ஆயுதமான சுளுக்கியை எடுத்து வந்து ராஜேசை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுப்பற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து சின்னப்பனை பிடித்து வைத்துக்கொண்டு திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சின்னப்பனை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட ராஜேசுக்கு திருமணமாகி செல்வராணி என்ற மனைவி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com