வேப்பந்தட்டை அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த மனைவி-காப்பாற்ற போராடிய கணவர் படுகாயம்

குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தீக்குளித்ததால் அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயமடைந்தார்.
வேப்பந்தட்டை அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த மனைவி-காப்பாற்ற போராடிய கணவர் படுகாயம்
Published on

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கடம்பூரை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 35), விவசாயி. இவரது மனைவி காசியம்மாள் (28). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு காசிதுரை (2) என்ற மகன் உள்ளார். 

இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த காசியம்மாள்  வீட்டிலிருந்த மண்எண்ணையை  உடலில் ஊற்றி  தீவைத்துக் கொண்டார். உடலில் தீபற்றியதால் அலறிய மனைவியை  ஓடிச்சென்று செல்லத்துரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். 

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்தினர் இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com