கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் மூதாட்டி மயங்கி விழுந்து பலி

கிருஷ்ணகிரி அருகே மருமகளுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மூதாட்டி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் மூதாட்டி மயங்கி விழுந்து பலி
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜகடை, பெத்தமேலுபள்ளி பகுதியை சேர்ந்தவர் அசோக் சிங். இவரது மனைவி அனுசுயாபாய் (55). இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். 

இந்நிலையில், நேற்று காலையில் அனுசுயாவிற்கும் அவரது மருமகளுக்கும் குடும்பதகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அனுசுயா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அனுசுயாவை மீட்டு கிருஷ்ணகிரியில் உளள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அனுசுயா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து புகாரின் பேரில் மகாராஜகடை போலீசார், அனுசுயா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com