ராயக்கோட்டை அருகே மயங்கி விழுந்த தொழிலாளி பலி

ராயக்கோட்டை அருகே சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பலி
பலி
Published on

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை அடுத்துள்ள சஜ்ஜலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது48). தொழிலாளியான இவர் தக்காளி மண்டி மதுக்கடை அருகே மதுபோதையில் சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com