நட்சத்திர பேட்ஸ்மேன் டு பிளிஸ்சிஸ் விளையாடுவாரா?: கலக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டூ பிளிஸ்சிஸ்-க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வருகிற ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டு பிளிஸ்சிஸ்
டு பிளிஸ்சிஸ்
Published on

ஐ.பி.எல். தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனால், ரசிகர்கள் ஐ.பி.எல். தொடரை எதிர்பார்த்து ஆவலுடன் இருக்கின்றனர்.

கரீபியன் லீக் கிரிக்கெட் தொடரில், செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக தென்ஆப்பிரிக்காவின் டு பிளிஸ்சிஸ் விளையாடி வந்தார். இதில் காயம் காரணமாக அரையிறுதிப் போட்டியில் டு பிளிஸ்சிஸ் பங்கேற்கவில்லை.

வருகிற ஞாயிற்றுக்கிழமை ஐ.பி.எல். தொடர் தொடங்குகிறது.  இந்நிலையில், டு பிளிஸ்சிஸின் காயம் இன்னும் சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஐ.பி.எல். தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்று பல தரப்பில் கேள்விகள் எழுகின்றன.  இதனால், சென்னை அணி நிர்வாகத்தை கவலையடையச் செய்துள்ளது.

ஐ.பி.எல். முதல் பாதித் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய டு பிளிஸ்சிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com