பேஸ்புக் மூலம் காதல் - வெளிநாட்டு பெண்ணை கற்பழித்த கேரள பாதிரியார்

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதலால் வங்காள தேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை கோட்டயத்துக்கு வரவழைத்து கற்பழித்த கேரள பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
பாதிரியார் தோமஸ்
பாதிரியார் தோமஸ்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள சங்கனாச்சேரி பாத்திமா புரத்தைச் சேர்ந்தவர் தோமஸ். இவர் கல்லறா பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். மேலும் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் நிர்வாகியாகவும் பணியாற்றி வந்தார்.

இவருக்கு பேஸ்புக் மூலம் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும் அந்த பெண்ணின் வாட்ஸ்-அப் எண் மூலமும் அவருடன் தொடர்ந்து பேசி பழகி வந்தார்.

இந்தநிலையில் அந்த பெண்ணை பாதிரியார் தோமஸ் கோட்டயத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து அந்த பெண்ணும் கோட்டயத்துக்கு வந்து சந்தித்தார். அப்போது அந்த பெண்ணை பாதிரியார் தோமஸ் கற்பழித்துள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வங்காள தேசத்துக்கே அனுப்பி வைத்து விட்டார். அதன்பிறகு அந்த பெண் பாதிரியார் தோமசை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பாதிரியாரை தேடி மீண்டும் கோட்டயத்துக்கு அந்த பெண் வந்தபோது அவரால் பாதிரியாரை சந்திக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து அந்த பெண் தன்னை பாதிரியார் திருமண ஆசை காட்டி கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பாதிரியார் தோமஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

மேலும் அந்த பெண்ணை போலீசார் கோட்டயத்தில் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர். இதற்கிடையே பாதிரியார் பொறுப்பில் இருந்து தோமசை மறைமாவட்ட நிர்வாகம் நீக்கி உள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com