பேஸ்புக் மூலம் பழக்கம்: காதலியை தேடி பாகிஸ்தான் செல்ல முயன்று எல்லையில் மாட்டிக்கொண்ட வாலிபர்

பாகிஸ்தானில் உள்ள தனது காதலியை தேடி இந்திய எல்லையை மீற முயன்ற 20 வயது இளைஞரை எல்லை பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
முகமது சித்திக் மற்றும் அவரது பாகிஸ்தான் காதலி சம்ரா
முகமது சித்திக் மற்றும் அவரது பாகிஸ்தான் காதலி சம்ரா
Published on

அகமதாபாத்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் முகமது சித்திக் என்பவர் தனது மகனான சித்திக் முகமது ஜிஷானை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மாநில போலீசார் ஜிஷானின் மொபைல் லொகேஷன் இந்தியா - பாகிஸ்தான் எல்லையோர பகுதியான டொலவிரா கிராமத்தை காட்டுவதை கண்டறிந்தனர்.

அதிர்ச்சியடைந்த மகாராஷ்டிரா மாநில போலீசார் குஜராத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் அனுப்பியுள்ளனர். குஜராத்தின் ரன் ஆஃப் கட்ச் வழியாக ஜிஷான் பாகிஸ்தான் அடைய திட்டமிட்டுள்ளார். எல்லை பகுதியை நெருங்கும் முன்பு, அவர் விட்டுச்சென்ற அவரது பைக்கை பாசில் பார்க் என்னுமிடத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் எல்லையை அடைவதற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டருக்கு முன்னதாக ரன் ஆஃப் கட்ச் பகுதியில் வறட்சியால் சோர்வடைந்து பாதிக்கப்பட்டு சுய நினைவுயின்றி 2 மணி நேரம் நேரம் கிடந்துள்ளார். 

கிட்டத்தட்ட 1,200 கி.மீ பயணம் செய்து அப்பகுதிக்குச் சென்றுள்ளார்.

ஜிஷானை மீட்டு முகாமுக்கு அழைத்து வந்த பி.எஸ்.எப் வீரர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான சம்ரா என்னும் பெண்ணை காதலிப்பதாகவும் இவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சியின் ஷாஆஹ் ஃபைசல் டௌன் எனும் இடத்தில் வசித்து வருவதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். 

இதனால்தான் பாகிஸ்தான் செல்ல முயன்றதாகவும் கூகுள் மேப் உதவியினால் இங்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

2012-ம் ஆண்டு இதேபோன்று ஒரு வாலிபர் பாகிஸ்தானுக்கு இதுபோன்று எல்லையை கடந்து சென்றுள்ளார். பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஆறு வருடங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். இந்திய எல்லையை கடந்திருந்தால் இவருக்கும் அது நிலை ஏற்பட்டிருக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com