எப்ஏ கோப்பை- விகன் அத்லெடிக்கிடம் வீழ்ந்து காலிறுதி வாய்ப்பை இழந்தது மான்செஸ்ர் சிட்டி

எஃப்ஏ கோப்பை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 10 வீரருடன் விளையாடிய மான்செஸ்டர் சிட்டி விகன் அத்லெடிக்கிடம் தோல்வியடைந்து காலிறுதி வாய்ப்பை இழந்தது. #FACUP
எப்ஏ கோப்பை- விகன் அத்லெடிக்கிடம் வீழ்ந்து காலிறுதி வாய்ப்பை இழந்தது மான்செஸ்ர் சிட்டி
Published on

கடந்த வாரம் நடைபெற்ற போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட். லெய்செஷ்டர் சிட்டி, செல்சி, சவுதாம்ப்டன், பிரைட்டன் அணிகள் வெற்றி பெற்றன. ஸ்வான்சி -ஷெஃப் வெட்னெஸ்டே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டி ஒன்றில் முன்னணி அணியான மான்செஸ்டர் சிட்டி விகன் அத்லெடிக் அணியை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. முதல் பாதி நேரத்தின் கூடுதல் நேரத்தில், அதாவது 47-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் பேப்ரியன் டெல்ப் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்.

இதனால் 2-வது பாதி நேரத்தில் மான்செஸ்டர் சிட்டி 10 வீரர்களை கொண்டு விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. என்றாலும் விகன்  அத்லெடிக் அணியை கோல் அடிக்க விடாமல் பார்த்தது. ஆனால் 79-வது நிமிடத்தில் விகன் அத்லெடிக் அணியின் வில் கிரிக் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் விகன் அத்லெடிக் 1-0 என மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com