இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளருக்கு பதவி நீட்டிப்பு

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் கான்ஸ்டன்டின் செயல்பாடு நன்றாக இருப்பதால் அவரது பதவி காலத்தை நீட்டிப்பு செய்ய அகில இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளருக்கு பதவி நீட்டிப்பு
Published on

மும்பை:

இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீபன் கான்ஸ்டன்டின் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 2-வது முறையாக நியமனம் செய்யப்பட்டார். அவரது பயிற்சியில் இந்திய கால்பந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடைசியாக நடந்த 13 ஆட்டங்களில் இந்திய அணி ஒன்றில் கூட தோல்வியை சந்தித்தது (11 வெற்றி, 2 டிரா) கிடையாது. ஸ்டீபன் கான்ஸ்டன்டின் செயல்பாடு நன்றாக இருப்பதால் அவரது பதவி காலத்தை நீட்டிப்பு செய்ய அகில இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

மும்பையில் நேற்று நடந்த அகில இந்திய கால்பந்து சம்மேளன டெக்னிக்கல் கமிட்டி கூட்டத்தில் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டின் பதவி கால ஒப்பந்தத்தை அடுத்த ஆண்டு (2019) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி வரை நீட்டிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டு செயற்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு செயற்குழு கூட்டத்தில் இறுதி அனுமதி அளிக்கப்படும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com