டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மன்மோகன் சிங் வீடு திரும்பினார்

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை தேறியதையடுத்து இன்று வீடு திரும்பினார்.
மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
Published on

புதுடெல்லி:

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன்சிங் (வயது 87) நெஞ்சுவலி காரணமாக நேற்று  முன்தினம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

இதைத்தொடர்ந்து மன்மோகன்சிங் உடல்நிலை தேறி வருவதாக அவரது அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மன்மோகன்சிங் குணம் அடைந்ததையடுத்து, சில மருத்துவ ஆலோசனைகளுடன் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com