டெக்சாஸ் விமான நிலையத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது - 3 பேர் உயிரிழப்பு

டெக்சாஸ் மாநிலத்தில் விமான நிலையத்தில் என்ஜின் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
டெக்சாஸ் விமான நிலையத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது - 3 பேர் உயிரிழப்பு
Published on

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், லாரெடோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை காலை பைப்பர்-31 என்ற சிறு விமானம் புறப்பட்டுச் சென்றது. டேக் ஆப் ஆகி உயரே பறந்த சிறிது நேரத்தில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து உடனடியாக லாரெடோ விமான நிலையத்திற்கே விமானத்தை திருப்பினார்.

ஆனால் ஓடுபாதையில் தரையிறக்க முயற்சித்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால், புல்வெளியில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று விமானத்தில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com