

ஏடென்:
ஏமன் நாட்டின் ஹட்ராமவுட் மாகாணத்திற்குட்பட்ட கட்டான் மாவட்டத்தின் வழியாக இன்று வழக்கம்போல் ராணுவ வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன.
இந்த வாகனங்கள் வருவதற்கு சற்றுநேரம் முன்னதாக பயங்கரவாதிகள் சாலையோரத்தில் புதைத்து வைத்திருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து சிதறியதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 4 வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.