முசாபர்நகர் பழைய இரும்புக் கடையில் குண்டுவெடிப்பு - 4 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள பழைய இரும்புக்கடையில் இன்று திடீரென குண்டுவெடித்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
முசாபர்நகர் பழைய இரும்புக் கடையில் குண்டுவெடிப்பு - 4 பேர் பலி
Published on

லக்னோ :

உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகரின் கச்சி சதக் பகுதியில் உள்ள பழைய இரும்புக்கடையில் இன்று திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், வெடிக்காத நிலையில் வேறு ஏதேனும் வெடிகுண்டுகள் உள்ளதா என்று குண்டுகளை செயலிழக்க செய்யும் அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த திடீர் குண்டிவெடிப்புக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com