நாலந்தா பட்டாசு ஆலை தீவிபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆனது - முதல் மந்திரி இரங்கல்

பீகார் மாநிலம் நாலந்தா அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
நாலந்தா பட்டாசு ஆலை தீவிபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆனது - முதல் மந்திரி இரங்கல்
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் நாலந்தா அருகே உள்ள ஜலால்புர் என்ற பகுதியில் அரசின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. வெடிமருந்து கிடங்கு மற்றும் பட்டாசு கிடங்கில் பயங்கரமாக தீ பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகியிருந்த நிலையில், மருத்துவமனைக்கு படுகாயங்களுடன் கொண்டு செல்லப்பட்ட 25-க்கும் மேற்பட்டவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் பலியானதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 குழந்தைகளும், ஒருபெண்ணும் அடங்குவர்.

பட்டாசு ஆலை தீ விபத்தில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com