

காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பிரபல ஷைட் மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடித்ததில் 6 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
காபூலின் தெற்கு பகுதியில் உள்ள அல் சாரா மசூதியில் இந்த தீவிவராத தாக்குதல் நடத்தப்பட்டது. ரமலான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை நடைபெற்ற போது அதிகளவிலான மக்கள் கூடியிருந்த இடத்தில் குண்டுவெடித்தது. இந்த தாக்குதலை அடுத்து சிறப்பு அதிரடிப்படை அல் சாரா பகுதிக்கு விரைந்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நஜீப் தனீஷ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.