காதில் உள்ள தூசியை காட்டன் பட்சால் சுத்தம் செய்வது மிகவும் ஆபத்தானது

காதில் உள்ள அழுக்கை காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்வதால் கேட்கும் திறன் பாதிக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காதில் உள்ள தூசியை காட்டன் பட்சால் சுத்தம் செய்வது மிகவும் ஆபத்தானது
Published on

மக்கள் தங்கள் காதில் உள்ள தூசி மற்றும் அழுக்கை காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்கின்றனர். அப்போது காதில் உள்ள மெழுகு போன்ற படலத்தை எடுத்து விடுகின்றனர். காது குழாய் வழியாக பட்ஸை விடும் போது கொடுக்கப்படும் அழுத்தம் காதில் நோய் தொற்றை ஏற்படுத்துகிறது.

காதில் உள்ள மெழுகு போன்ற படலம் தூசு மற்றும் மாசுக்களிலிருந்து பாதுகாக்கவே உருவாகிறது. அது அதிக அளவு உருவாகி காதின் மேற்புறத்தில் வரும் போது மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். சிலர் தினமும் குளித்தவுடன் காதில் உள்ள அழுக்கை எடுக்கின்றனர். அது மிகவும் ஆபத்தானதாகும்.

சிலர் பட்ஸ் பயன்படுத்தும் போது அது காதினுள் சிக்கி கொள்கிறது. அறுவை சிகிச்சை மூலம் அவை நீக்கப்படுகின்றன. இதனால் பட்ஸ் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பட்ஸ் கொண்டு காதின் வெளிபுறத்தில் உள்ள அழுக்கை மட்டுமே நீக்க வேண்டும்.


மேலும், பட்ஸில் உள்ள காட்டனானது ஒரு பிளாஸ்டிக் குச்சியின் இரு முனையிலும் வைக்கப்படுகின்றன. பட்ஸை பயன்படுத்திய பிறகு பிளாஸ்டிக் அதிக அளவில் குப்பைகளில் போடப்படுகின்றன. கடற்கரை ஓரங்களில் காணப்படும் பிளாஸ்டிக் குப்பைகளில் பட்ஸ் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com