அரசு பங்களாவை பயன்படுத்தினால் நாள் ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் வாடகை: ராஜஸ்தான் அரசு

அரசு பங்களாவை பயன்படுத்தும் முன்னாள் மந்திரிகள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் வாடகையாக செலுத்த வேண்டும் என ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பங்களாவில் 2 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒருநாள்  வாடகை பத்தாயிரம் ரூபாய் என ராஜஸ்தான் அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இந்த புதிய மசோதா எதிர்க்கட்சியான பாஜகவின் எதிர்ப்பையும் மீறி ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் என்பவரால் கடந்த ஜூலை 22 முன் வைக்கப்பட்டது. தற்போது குரல் வாக்கெடுப்பின் மூலம் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இரு மாதங்களுக்கு மேல் அரசு பங்களாவில் தங்கியிருந்த முன்னாள் மந்திரிகள் மாத வாடகை ரூபாய் 5000 செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com