தேர்வில் மதிப்பெண் குறைவு வி‌ஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை

காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த பிளஸ்-1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேர்வில் மதிப்பெண் குறைவு வி‌ஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை
Published on

மதுரை:

திருப்பரங்குன்றம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் ரேஷ்மா (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் ரேஷ்மா குறைவான மதிப்பெண் எடுத்து இருந்தார். எனவே பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ரேஷ்மா எலி மருந்து குடித்து விட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ரேஷ்மா பரிதாபமாக இறந்தார்.

திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com