மதுரையில் பரீட்சையில் தோல்வி- மாணவர் தற்கொலை

பரீட்சையில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரையில் பரீட்சையில் தோல்வி- மாணவர் தற்கொலை
Published on

மதுரை:

மதுரை பெருங்குடி அருகில் உள்ள வளையங்குளத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வய27). டிப்ளமோ பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இதற்கான தேர்வில் அவர் ஒரு சில பரீட்சையில் தேர்ச்சி அடையவில்லை. இருந்தபோதிலும் கார்த்திக் தொடர்ந்து 3 தடவைகள் ‘அரியர்ஸ்’ தேர்வு எழுதினார். ஆனாலும் தேர்ச்சி பெறமுடியவில்லை.

இதனால் விரக்தி அடைந்த கார்த்திக் நேற்று காலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக கார்த்திக் சகோதரர் பால்பாண்டி பெருங்குடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செண் பகவேலன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் மதுரை ஒத்தக்கடை அருகில் உள்ள மலைச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து (36). இவருக்கு மனநல பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் வைரமுத்து நேற்று இரவு வீட்டின் சமையல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக வைரமுத்துவின் தாய் சரஸ்வதி ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com