ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் அபேஸ்- 3 பெண்கள் சிக்கினர்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் அபேஸ் செய்த 3 பெண்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் கொள்ளை
பணம் கொள்ளை
Published on

சத்தியமங்கலம்:

கோவையை சேர்ந்த ரேவதி (வயது 40) என்ற பெண் பண்ணாரி கோயிலுக்கு செல்ல கோவையிலிருந்து சத்தியமங்கலத்துக்கு வந்தார்.

புஞ்சை புளியம்பட்டி அருகே பஸ் வந்த போது ரேவதி பையில் வைத்திருந்த 10 ஆயிரம் பணத்தை யாரோ அபேஸ் செய்து விட்டனர்.

பணம் திருடப்பட்டதை கண்டு அவர் கூச்சலிட்டார். உடனே பஸ்சின் டிரைவர்-கண்டக்டர் மற்றும் பயனிகள் அதிர்ச்சி அடைந்து விசாரித்தனர். அப்போது அதே பஸ்சில் வந்த 3 பெண்கள் தான் ரேவதியிடம் இருந்து பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.

இவர்கள் ஒருவருக்கொருவர் பணத்தை மாற்றி மாற்றி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

பிறகு அந்த 3 பெண்களையும் கையும்-களவுமாக பிடித்த சக பயணிகள் அவர்களை சத்தியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com