ஈரோடு கல்லூரி மாணவி திடீர் மாயம் - வாலிபர் கடத்தி சென்று விட்டதாக தந்தை புகார்

ஈரோட்டில் கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து வாலிபர் கடத்தி சென்று விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
மாணவி மாயம் (கோப்பு படம்)
மாணவி மாயம் (கோப்பு படம்)
Published on

முத்தூர்

முத்தூர் அருகே உள்ள பெரிய கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம், விவசாயி. இவரது மகள் மனுகாவியா (வயது 19).

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மனுகாவியா 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் படித்துக் கொண்டிருந்த மனுகாவியா திடீரென மாயமானார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார்.

புகாரில் பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் தனது பெண்ணிடம் பழகி வந்ததாகவும் அவர்தான் தன் மகளை கடத்தி சென்றிருக்க கூடும். எனவே எனது மகளை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com