குற்றாலத்தில், 22-ந்தேதி சமத்துவ மக்கள் கழக மாநில பொதுக்குழு கூட்டம்: எர்ணாவூர் நாராயணன் அறிக்கை

சமத்துவ மக்கள் கழகத்தின் முதல் மாநில செயற்குழு கூட்டம் குற்றாலத்தில் வருகிற 22- ந்தேதி நடக்கிறது என்று எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். #ernavoornarayanan
குற்றாலத்தில், 22-ந்தேதி சமத்துவ மக்கள் கழக மாநில பொதுக்குழு கூட்டம்: எர்ணாவூர் நாராயணன் அறிக்கை
Published on

தென்காசி:

சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமத்துவ மக்கள் கழகத்தின் முதல் மாநில செயற்குழு கூட்டம் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் வருகிற 22-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் வரவு-செலவு கணக்கு, ஆண்டு அறிக்கை வாசித்தல், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் போன்றவை நடக்கின்றன. 

மேலும் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஆய்வு கூட்டம் நடத்தி தொகுதி வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது பற்றியும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ernavoornarayanan 

X

Maalai Malar
www.maalaimalar.com