இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் வங்காளதேசம் பிரிமீயர் லீக்கில் விளையாடுகிறார்

இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்த மோர்கன் வங்காளதேசத்தில் நடைபெற இருக்கும் டி20 லீக் தொடரில் விளையாட இருக்கிறார்.
இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன்
இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன்
Published on

வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு வங்காளதேசம் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில் ஒரு அணியாக இருக்கும் டாக்கா டைனமிட்ஸ் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கனை ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து டைனமிட்ஸ் அணி தலைமை நிர்வாகி கூறுகையில் ‘‘நாங்கள் வரவிருக்கும் தொடருக்காக மோர்கனை ஒப்பந்தம் செய்துள்ளோம். டி20 கிரிக்கெட்டில் அவருக்கு சிறப்பான அனுபவம் உள்ளதால் அவரை தேர்வு செய்தோம். அவர் தொடர் முழுவதும் பங்கேற்பார் என்று எதிபார்க்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

டாக்கா டைனமிட்ஸ் அணியில் ஏற்கனவே அந்த்ரே ரஸல், சுனில் நரைன், பொல்லார்டு, ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா சசாய் ஆகியோர் உள்ளனர்.

இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் மோர்கன். இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com