மதுரை அருகே வீடு புகுந்து இளம்பெண் கடத்தல்: மர்ம நபருக்கு வலைவீச்சு

மதுரை அருகே இளம்பெண்ணை கடத்திச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை அருகே வீடு புகுந்து இளம்பெண் கடத்தல்: மர்ம நபருக்கு வலைவீச்சு
Published on

மதுரை:

மதுரை மாவட்டம், டி.ராமநாதபுரம் அருகே உள்ள திருமாணிக்கத்தைச் சேர்ந்தவர் நாகன் (வயது 44). இவரது மகள் சிவரஞ்சனி (18). இவர் அங்குள்ள தனியார் மில்லில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சிவரஞ்சனியை மர்ம நபர் ஆசை வார்த்தை காட்டி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து நாகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கடத்திச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com