

நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 112 ரன்னும், தொடக்க வீரர் அலஸ்டைர் குக் 88 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ரோலண்ட்-ஜோன்ஸ் பந்தில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் நிலைகுலைந்தனர்.
அம்லா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோலண்ட்-ஜோன்ஸ்
தொடக்க வீரர்கள் எல்கர், குன் ஆகியோர் முறையே 8, 15 ரன்னில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த முன்னணி பேட்ஸ்மேன் அம்லாவை 6 ரன்னிலும், அதிரடி வீரர் டி காக்கை 17 ரன்னிலும் வெளியேற்றினார் ரோலண்ட்-ஜோன்ஸ்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆண்டர்சன்
முக்கிய நான்கு விக்கெட்டுக்களை ரோலண்ட்-ஜோன்ஸ் தொடர்ந்து வீழ்த்தியதால் தென்ஆப்பிரிக்கா 47 ரன்கள் எடுப்பதற்குள் முன்னணி பேட்ஸ்மேன்களை இழந்து திணறியது.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பிராட்