கடைசி டெஸ்ட்: கிராவ்லி 171 ரன் விளாச இங்கிலாந்து முதல்நாள் ஆட்ட முடிவில் 332/4

பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி டெஸ்டின் இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் கிராவ்லி 171 ரன்கள் விளாச இங்கிலாந்து 332 ரன்கள் குவித்துள்ளது.
கிராவ்லி, ஜோஸ் பட்லர்
கிராவ்லி, ஜோஸ் பட்லர்
Published on

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி டிரா ஆனது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று சவுத்தாம்ப்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோரி பேர்ன்ஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந் ஜாக் கிராவ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் டாம் சிப்லி 22 ரன்னிலும், அடுத்து வந்த ஜோ ரூட் 29 ரன்னிலும், ஒல்லி போப் 3 ரன்னிலும் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து 127 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டை இழந்தது.

5-வது விக்கெட்டுக்கு கிராவ்லி உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிராவ்லி 80 பந்தில் அரைசதமும், 171 பந்தில் சதமும் அடித்தார்.

மறுமுனையில் பட்லர் 85 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த விக்கெட்டை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்துள்ளது. கிராவ்லி 171 ரன்களுடனும், பட்லர் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டாம் சிப்லி, 2. ரோரி பேர்ன்ஸ், 3. கிராவ்லி, 4. ஜோ ரூட், 5. ஒல்லி போப், 6. ஜோஸ் பட்லர், 7. கிறிஸ் வோக்ஸ், 8. டாம் பெஸ், 9. ஜாஃப்ரா ஆர்சர், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஷான் மசூத், 2. அபித் அலி, 3. அசார் அலி, 4. பாபர் அசாம், 5. ஆசாத் ஷபிக், 6. பவத் அலாம், 7. முகமது ரிஸ்வான், 8. யாசிர் ஷா, 9. ஷாஹீன் அப்ரிடி, 10. முகமது அப்பாஸ், 11. நசீம் ஷா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com