பயிற்சி ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் தேர்வு- தவான் டக், புஜாரா 1

எசக்ஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தவான் டக், புஜாரா 1 ரன்னிலும் வெளியேறினார்கள். #ENGvIND
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் தேர்வு-  தவான் டக், புஜாரா 1
Published on

இந்த ஆட்டம் இன்று செல்ம்ஸ்போர்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முரளி விஜய், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை எம் கோல்ஸ் வீசினார். இந்த ஒவரின் 3-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் தவான் ஆட்டம் இழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். இவர் ஆட்டத்தின் 3-வது ஓவரின் 4-வது பந்தில் 1 ரன்கள் எடுத்த நிலையில ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 5 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com