340 ரன்னில் தோல்வி: வாகனின் கடும் குற்றச்சாட்டால் அதிர்ச்சிக்குள்ளான ஜோ ரூட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 340 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தற்கு வாகன் கடுமையாக குற்றஞ்சாட்டினார். இதனால் ஜோ ரூட் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
340 ரன்னில் தோல்வி: வாகனின் கடும் குற்றச்சாட்டால் அதிர்ச்சிக்குள்ளான ஜோ ரூட்
Published on

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து 133 ரன்னில் சுருண்டு, 340 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் வாகன், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மீது கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து வாகன் கூறுகையில் ‘‘இங்கிலாந்து வீரர்களின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தைப் பார்க்கையில், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பெரிய அளவில் மரியாதை கொடுக்கவில்லை என்று நினைக்க தோன்றுகிறது. டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறார்கள். அட்டக், அட்டக், அட்டக் என்ற நிலையில்தான் செல்கிறார்கள். பந்து வீச்சாளர்கள் அல்லது அணி மோசமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை பற்றி அவர்கள் நினைக்கவேயில்லை’’ என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் குப்டன் ஜோ ரூட் கூறுகையில் ‘‘வாகனின் கருத்து ஏற்கத்தக்கதல்ல என்று நினைக்கிறேன். வாகன் அப்படி சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்தத் தொடரை கைப்பற்றுவதை நாங்கள் பெறுமையாக நினைக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக 2-வது டெஸ்ட்டில் மோசமாக விளையாடிவிட்டோம்’’ என்றார்.

வாகனும், ஜோ ரூட்டின் தந்தை மாட் ஆகிய இருவரும் ஒன்றாக விளையாடியவர்கள். ஜோ ரூட் சிறுவனாக இருந்தபோது வாகன் குடும்ப நண்பராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com