வல்லம் அருகே என்ஜினீயரை மிரட்டி செயின் பறிப்பு

வல்லம் அருகே என்ஜினீயரை மிரட்டி செயினை பறித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
செயின் பறிப்பு
செயின் பறிப்பு
Published on

வல்லம்:

தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அரசு என்பவரின் மகன் கெல்வின் (வயது 27).இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் பள்ளியக்ர ஹாரத்தில் இருந்து பிள்ளையார்பட்டி புறவழிச்சாலையில் சென்றுள்ளார். அப்போது 4 பேர் கும்பல் அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தி அரிவாளை காட்டி மிரட்டி கெல்வின் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து கெல்வின் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 4 பேரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com