காதலித்ததால் சிறை வைப்பு: வாட்ஸ்அப்பில் கதறும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி

காதலரையும் தன்னையும் கொன்றுவிடுவதாக மிரட்டும் குடும்பத்தாரிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என வாட்ஸ்அப் மூலம் கல்லூரி மாணவி அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Whatsapp
காதலித்ததால் சிறை வைப்பு: வாட்ஸ்அப்பில் கதறும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி
Published on

நாகர்கோவில்:

குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் எழுதிய கடிதமும், அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் இன்று வாட்ஸ்-அப்பில் பரவியது.

அந்த வீடியோவில் பேசும் மாணவி, நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதாக கூறுகிறார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்தது.

இது மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் மாணவியை எச்சரித்தனர். ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்தார். இதனால் பெற்றோர் அவரை வீட்டிலேயே சிறை வைத்து விட்டனர்.

வீட்டில் சிறை வைத்ததால் வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் இந்த வீடியோவை வாட்ஸ்-அப்பில் வெளியிடுவதாகவும், இதை பார்ப்பவர்கள் தங்களுக்கு உதவும்படியும் மாணவி கண்ணீர் விடுகிறார். என்னை வீட்டில் சிறை வைத்த பெற்றோர் என் காதலன் மீது நான் போலீசில் புகார் செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்கள். காதலன் மீது புகார் கொடுக்காவிட்டால் அவரை கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார்கள்.

இந்த ஜனநாயக நாட்டில் காதலிக்க உரிமை இல்லையா? காதலித்தால் கொலை செய்யப்பட வேண்டுமா? என்றும் மாணவி கேள்வி எழுப்பி உள்ளார். இந்த வாட்ஸ்-அப் வீடியோ இன்று காலை முதல் தான் முக்கிய பிரமுகர்களின் செல்போனில் பரவ தொடங்கியது.

மின்னல் வேகத்தில் இந்த செய்தி பலரது செல்போனிலும் பரவியதை தொடர்ந்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வாட்ஸ்-அப்பில் வெளியான வீடியோ குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். அதில் கூறப்பட்ட விலாசத்தில் அத்தகைய சம்பவம் நடந்து உள்ளதா? மாணவி சிறை வைக்கப்பட்டிருக்கிறாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். #Whatsapp

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com