மெலட்டூர் அருகே ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி

மெலட்டூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற என்ஜினீயரிங் மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள மணக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் இவரது மகன் பாலாசூர்யா (வயது 21) இவர். என்ஜினீயரிங் படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று பாலாவிஜய், தனது நண்பர்களுடன் அருகில் உள்ள சுள்ளான் ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது பாலாசூர்யா எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழம் அதிகம் உள்ள புதை மணல் பகுதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதில் தண்ணீரில் தத்தளித்த அவரை உடனடியாக கிராம மக்கள் மீட்டனர். இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுள்ளான் ஆற்றில் மதகரம், மண்குண்டு மற்றும் அதன் சுற்று பகுதியில் ஆற்றில் அதிகளவில் பல அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டதால் தான் புதைகுழி என தெரியாமல் இந்த துயர சம்பவம் நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மெலட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com