திருப்பதியில் குடிபோதையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அடித்து கொலை

திருப்பதியில் குடிபோதையில் கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதியில் குடிபோதையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அடித்து கொலை
Published on

திருப்பதி:

திருப்பதி பி.கே. லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் தர்மைய்யா. இவரது மகன் நாராயணா (22). இவர் திருப்பதி அடுத்த சந்திரகிரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார்.

திருப்பதி பஸ் நிலையம் அருகேயுள்ள ஸ்ரீனிவாசம் கெஸ்ட் அவுஸ் முன்பாக நாராயணா மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து மது அருந்தினர். அப்போது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றி கைகலப்பானது. இதில் 4 மாணவர்கள் சேர்ந்து நாராயணாவை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த நாராயணாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ரூயா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை நாராயணா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து சாய் கணேஷ், ஸ்ரீகாந்த் ஆகிய 2 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். குடிபோதையில் கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com