ரெட்டியார்பாளையத்தில் என்ஜினீயர் தூக்கு போட்டு தற்கொலை

ரெட்டியார் பாளையத்தில் என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரெட்டியார்பாளையத்தில் என்ஜினீயர் தூக்கு போட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

ரெட்டியார் பாளையம் மரியாள் நகரை சேர்ந்தவர் ஜோசப் சகாயம். இவர் புதுவை நகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய ஒரே மகன் சரவண தேவா (வயது 25). டிப்ளமோ என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து பெண் பார்த்தனர். ஆனால், பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய சரவண தேவாவுக்கு விருப்பம் இல்லை. ஆனாலும், அந்த பெண்ணையே திருமணம் செய்து வைக்க பெற்றோர் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சரவண தேவா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு பெற்றோர் வீட்டில் தூங்கிய பின்னர் சேலையால் மின் விசிறியில் சரவண தேவா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் இரிசப்பன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com