ஸ்ரீரங்கத்தில் என்ஜினீயர் தூக்கில் தற்கொலை

ஸ்ரீரங்கத்தில் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சூரியப்பிரகாசம் (வயது 29). இவருக்கு திருமணமாகி விட்டது. சூரிய பிரகாசம், என்ஜினீயர். 

இவர் சென்னையில் தனியார் ஊழியராக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஊருக்கு வந்த அவர் மீண்டும் வேலைக்கு போகாமல் இருந்துள்ளார். மேலும் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்தார். இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

இந்த  நிலையில் நேற்று ஸ்ரீரங்கத்தில் உள்ள வீட்டில் சூரியப்பிரகாசம் மின் விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துள்ளார். குடிபோதையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை மகன் தூக்கில் தொங்கியதை பார்த்து தந்தை ஆறுமுகம் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com