என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு 27-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜின் நீதிமன்ற காவலை வருகிற 27-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு 27-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு
Published on

நாமக்கல்:

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) கொலை வழக்கு தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் காணொலி காட்சி மூலம் யுவராஜின் நீதிமன்ற காவலை வருகிற 27-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

இதேபோல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜின் கார் டிரைவர் அருணின் நீதிமன்ற காவலும் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com