இந்திய பெண்கள் அணியின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி

போட்செப்ஸ்ரூமில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய பெண்கள் அணியின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி
Published on

இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய பெண்கள் அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் போட்செப்ஸ்ரூமில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை சந்தித்தது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் சேர்த்தது. ஆன்ட்ரி ஸ்டெயின் (83 ரன்), திரிஷா செட்டி (76 ரன்), டிரையான் (77 ரன்) அரைசதம் அடித்தனர். அடுத்து களம் இறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்களுடன் (26 ஓவர்) வலுவான நிலையில் இருந்தது.

தீப்தி ஷர்மா (71 ரன்), கேப்டன் மிதாலி ராஜ் (54 ரன்) வெளியேறியதும் ரன்வேகம் தளர்ந்தது. 50 ஓவர்கள் முழுமையாக ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடர்ச்சியாக 16 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி கண்டிருந்த இந்திய பெண்கள் அணி அதன் பிறகு சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் இறுதிப்போட்டியில் மீண்டும் மோத உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com